Safety Guidelines for Investors - Directorate Lr. dtd 18/07/2022
Download PDF ( 9 pages)
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!
அஞ்சல் சேமிப்பு வாடிக்கையாளர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு குறித்து அஞ்சல் வாரியம் 18.07.2022 அன்று வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
🔸வாடிக்கையாளர்கள் அஞ்சல் சேமிப்பு வட்டி விகிதங்களை https://www.indiapost.gov.in/Financial/Pages/Content/Post-Office Saving-Schemes.aspX என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
🔸 இந்திய குடிமக்களாக உள்ளவர்கள் அஞ்சலகத்திற்கு நேரடியாக வந்து தமது அடையாள மற்றும் இருப்பிடச் சான்றிதழ் சமர்ப்பித்து அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் சேரலாம்.
🔸 புதிதாக தொடங்கப்படும் கணக்குகள் மற்றும் தற்போதுள்ள கணக்குகள் அனைத்திற்கும் மொபைல் எண், PAN or படிவம் 60 மற்றும் வாரிசுதாரர் நியமனம் ஆகியவை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
🔸 அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு ATM Card/Cheque Book/Aadhaar Seeding/e-banking/m-banking ஆகிய வசதிகள் உள்ளன.
🔸இன்டெர்நெட் சேமிப்பு மூலம் SB, RD, SSA டெபாசிட் செய்வது, RD &TD கணக்குகளை தொடங்குவது மற்றும் முடிப்பது போன்ற வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு https://ebanking.indiapost.gov.in இணையதள இணைப்பில் சென்று விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
🔸SB, SSA, PPF, TD தொகைகளை NEFT /RTGS மூலம் வங்கி கணக்கில் இருந்து செலுத்தும் வசதி மற்றும் MIS, TD, SCSS, வட்டியினை auto credit to Bank accounts செய்வது மேலும் முதிர்வு தொகையை ECS மூலம் பரிமாற்றம் செய்யும் வசதி இவைகளை தெரிவிக்க வேண்டும். IFSC code of POSB is IPOS0000DOP.
🔸Toll free voice message மூலம் இருப்பு தொகை சரிபார்ப்பு
🔸ATM கார்டினை பிளாக் செய்ய Toll free 18002666868 வசதி
🔸 ரூபாய் 1000 க்கு மேல் பணம் எடுக்கும் போது மற்றும் ரூபாய் 2000 க்கு மேல் டெபாசிட் இவைகளுக்கு SMS தகவல்
🔸POSB ATM பணம் எடுக்கும் போது பணம் வராமல் தொகை கழிந்தால் புகார் செய்யும் முறை
🔸அஞ்சல் கணக்கு புத்தகத்தை எந்த வொரு CBS அஞ்சலகத்திலும் அப்டேட் செய்வது கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் சேமிப்பு கணக்கில் செய்யப்பட்டவரோ செலவு குறித்து விவரங்களை உடனடியாக நீங்கள் அறிந்து கொள்ள இயலும்.
🔸பாஸ்புக் செக் மற்றும் ATM கார்டுகளை யாருக்கும் கொடுக்காமல் இருப்பது
இ பேங்கிங், மொபைல் பேங்கிங், இவைகள் மீதெழும் புகார்என நேரிடையாக அஞ்சல் சேமிப்பு சேவையை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டும்
🔸முகவர் மூலம் டெபாசிட் செய்யும் போது RD என்றால் அஸ்லாஸ் கார்டும் இதர சேமிப்புகளுக்கு AAR ரசீதுகளும் பெற்றுக்கொள்ள வேண்டும்
🔸ரூபாய் 20000 க்கு மேல் செக் கொடுக்கும் பொழுது போஸ்ட் மாஸ்டர் என செக் கொடுக்க வேண்டும்
🔸முகவர்களை Withdrawal வாங்க Messengers ஆக நியமிக்க கூடாது.
🔸10 நாட்களுக்குள் சேமிப்பு புத்தகம் சரிபார்த்தல் வேண்டும். இதில் ஏதும் விடுதல் இருந்தால் போஸ்ட் மாஸ்டர் அல்லது சேமிப்பு அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும்.
🔸 அஞ்சலக ATM களில் பணம் எடுக்கும் பொழுது ஏற்படும் பிரச்சனைகள் சம்பந்தமாக உங்கள் சேமிப்பு கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து postatm@indiapost.gov.in என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் புகாரை தெரிவிக்கலாம். இதர வங்கி ATMகளில் பணம் எடுக்கும் போது பிரச்சனை என்றால் உடனடியாக அந்த வங்கியை தொடர்பு கொள்ளவும்.
e-banking, m-banking, NEFT, RTGS தொடர்பான அனைத்து விசாரணை மற்றும் பிரச்சனைகளுக்கு சேமிப்பு கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து dopebanking@indiapost.gov.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
www.indiapost.gov.in (https://www.indiapost.gov.in/Financial/Pages/Content/Post-Office)
COMMENTS